உலகம்

பாகிஸ்தானுக்கு கடன் வழங்கக்கூடாது: ஐ.எம்.எப்.பில் வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

Published On 2025-05-09 23:31 IST   |   Update On 2025-05-09 23:31:00 IST
  • பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.
  • இதுதொடர்பாக நடந்த வாக்கெடுப்பையும் இந்தியா புறக்கணித்தது.

வாஷிங்டன்:

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப். அமைப்பிடம் இருந்து பாகிஸ்தான் கடன் பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு 1. 3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஐ.எம்.எப். திட்டமிட்டிருந்தது. இந்தக் கடனை வழங்குவுது குறித்து ஐ.எம்.எப். அமைப்பு ஆய்வு செய்ய இருந்தது..

ஆனால், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நன்கு யோசித்து முடிவு எடுக்கவேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நடந்த ஐ.எம்.எப். அமைப்பில் நடந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. சர்வதேச நிதியத்திடம் இருந்து பெறும் நிதியை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு செலவு செய்கிறது என தெரிவித்தது.

Tags:    

Similar News