உலகம்

'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்...' குழந்தையின் கண்ணீரைக் கண்டு கதறி அழுத தந்தை- வீடியோ

Published On 2025-05-24 08:05 IST   |   Update On 2025-05-24 08:05:00 IST
  • வீடியோ 30 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பார்வையைக் கடந்து வைரலாக பரவி வருகிறது.
  • நெட்டிசன்கள் பலரும் தந்தை அன்புக்கு நிகரில்லை என பாராட்டி வருகின்றனர்.

ஆண்களின் மனம் கல் போன்றது என பொதுவாக கூறுவர். ஆனால் தனது குழந்தைக்கு ஒரு துன்பம் என்றால் எந்தவொரு தந்தையும் மெழுகைப் போல உருகி விடுவார். அதுபோல ஒரு சம்பவம் தற்போது அரங்கேறி இணைய உலகில் வைரலாகியது.

அந்த வீடியோவில் ஒரு ஆண் தடுப்பூசி போடுவதற்காக தனது மகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அவ்வளவு நேரம் சிரித்துக் கொண்டிருந்த அந்த குழந்தை தடுப்பூசி போடுவதற்காக நர்சு நெருங்கி வரவும் அழ ஆரம்பித்தது.

குழந்தைதான் அழுகிறது என்றால் அதற்கு போட்டியாக தந்தையும் அழ ஆரம்பித்தார். இது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ 30 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பார்வையைக் கடந்து வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தந்தை அன்புக்கு நிகரில்லை என பாராட்டி வருகின்றனர்.



Tags:    

Similar News