உலகம்

அலுவலகம்

இனி வாரம் 3 நாட்கள் விடுமுறை, 4 நாட்கள் மட்டுமே வேலை

Published On 2022-06-07 08:37 GMT   |   Update On 2022-06-07 10:15 GMT
  • இந்த திட்டம் தொழிலாளர்களின் நலன் மற்றும் உற்பத்தி திறனில் எந்த அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது என ஆய்வு நடத்தப்படவுள்ளது.
  • இந்த திட்டம் நிறுவனங்களுக்கும் நன்மை சேர்க்கும் என கருதப்படுகிறது.

லண்டன்:

இங்கிலாந்து முழுவதும் பல்வேறு நிறுவனங்களில், ஊதிய இழப்பு இல்லாமல் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முதல் இங்கிலாந்தில் உள்ள பல வங்கிகள், பராமரிப்பு இல்லங்கள், அனிமேஷன் ஸ்டுடியோக்கள், உட்பட பல துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் உட்சபட்ச திறன் வெளிப்படும் என்பதால் 100 சதவீதம் ஊதியம் அளிக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

3 நாட்கள் விடுமுறை திட்டம் தொழிலாளர்களின் நலன் மற்றும் உற்பத்தி திறனில் எந்த அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது என நிறுவன அமைப்பாளர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளார்கள்.

இந்த திட்டம் நிறுவனங்களுக்கும் நன்மை சேர்க்கும் என கருதப்படுகிறது.

Tags:    

Similar News