உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவரை தேர்ந்தெடுக்கும் 88 பேர் கொண்ட குழு

Published On 2026-03-02 15:17 IST   |   Update On 2026-03-02 15:17:00 IST
  • ஈரானின் ஆன்மீக மற்றும் அரசியல் அதிகாரத்தின் உச்சப்புள்ளியாக விளங்குபவர் உச்ச தலைவர்.
  • குழுவில் உள்ளவர்கள் அனைவரும் ஷியா மதகுருக்கள்.

ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்க தாக்குதலில் 1989-ம் ஆண்டு முதல் இந்தப் பதவியில் இருந்த அலி காமேனியின் மறைவு அந்நாட்டின் எதிர்காலம் குறித்த மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் ஆன்மீக மற்றும் அரசியல் அதிகாரத்தின் உச்சப்புள்ளியாக விளங்குபவர் உச்ச தலைவர்.

ஈரானின் உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அல்லது பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் நிபுணர்கள் குழு எனப்படும் 88 பேர் கொண்ட குழுவிடம் உள்ளது. இந்தக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் ஷியா மதகுருக்கள். இவர்கள் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கார்டியன் கவுன்சில் என்ற அமைப்பு முதலில் அங்கீகரிக்க வேண்டும். சீர்திருத்தவாதிகள் அல்லது மிதவாதிகள் இந்தக் குழுவில் நுழைவதைத் தடுக்க, இந்த கவுன்சில் வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளது.

புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அதிபர், நீதித்துறைத் தலைவர் மற்றும் ஒரு மூத்த மதகுரு அடங்கிய தற்காலிகத் தலைமைக் குழு நாட்டின் பணிகளைக் கவனிக்கும். 

Tags:    

Similar News