உலகம்

கடவுளின் எதிரிகள்: டிரம்ப் - நேதன்யாகுவுக்கு எதிராக ஃபத்வா வெளியிட்ட ஈரான் மூத்த மதகுரு

Published On 2025-07-01 03:15 IST   |   Update On 2025-07-01 03:15:00 IST
  • உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
  • முஹாரிப் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மரணம், சிலுவையில் அறையப்படுதல், தலை துண்டிக்கப்படுதல் உள்ளிட்ட தண்டனைகளை எதிர்கொள்வார்.

ஈரானின் மூத்த ஷியா மதகுருக்களில் ஒருவரான அயதுல்லா மகரெம் ஷிராசி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோருக்கு எதிராக புதிதாக வெளியிடப்பட்ட 'ஃபத்வா' (மத ஆணையில்) அவர்களை "கடவுளின் எதிரிகள்" என்று அறிவித்துள்ளார்.

எனவே உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஒரு தலைவரையோ அல்லது மர்ஜாவையோ (மத அதிகாரத்தையோ) அல்லது அரசையோ அச்சுறுத்தும் எவரும் கடவுளுக்கு எதிராகப் போரை நடத்துபவர் (முஹாரிப்) என்று அவர் கூறினார்.

ஈரானிய சட்டத்தின் கீழ், முஹாரிப் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மரணம், சிலுவையில் அறையப்படுதல், தலை துண்டிக்கப்படுதல் மற்றும் நாடுகடத்தப்படுதல் உள்ளிட்ட தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியவர் ஆவார்.

முஸ்லிம்கள் தங்கள் கடமையை நிறைவேற்றப் போராடும்போது ஏதேனும் கஷ்டங்களையோ அல்லது இழப்புகளையோ சந்தித்தால், அவர்கள் கடவுளின் பாதையில் போராடியதற்கான வெகுமதியைப் பெறுவார்கள் என்றும் ஷிராஸி கூறுகிறார்.

உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களும் இந்த எதிரிகள் தங்கள் வார்த்தைகள் மற்றும் தவறுகளுக்கு வருத்தப்பட வைப்பது அவசியம் என்று 'ஃபத்வா'வில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News