உலகம்

மியான்மர், தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 107 ஆக உயர்வு - 350 பேர் படுகாயம்

Published On 2025-03-28 19:09 IST   |   Update On 2025-03-29 14:32:00 IST
  • கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி வருகின்றன.
  • மியான்மரில் 103 உயிரிழப்புகளும், தாய்லாந்தில் 4 உயிரிழப்புகளும் இதுவரை பதிவாகி உள்ளன.

இந்திய நேரப்படி இன்று மதியம் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவானது. இந்தியாவின் கொல்கத்தா, மணிப்பூர் மற்றும் சீனா, வங்கதேச பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலநடுக்கத்தால் கடுமையான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய தகவலின்படி நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. மியான்மரில் 103 உயிரிழப்புகளும், தாய்லாந்தில் 4 உயிரிழப்புகளும் இதுவரை பதிவாகி உள்ளன.

மியான்மரில் 350 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாய்லாந்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் சூழலில் உயிரிழப்பு எண்ணிக்கை பன்மடங்கு உயரும் என்று அஞ்சப்படுகிறது.

Tags:    

Similar News