உலகம்

வியட்நாமில் கனமழைக்கு 90 பேர் பலி

Published On 2025-11-23 19:18 IST   |   Update On 2025-11-23 19:18:00 IST
  • உலகத்திலேயே வெள்ளத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக வியட்நாம் திகழ்கிறது.
  • வியட்நாம் மக்கள் தொகையில பாதிபேர் மிகவும் பாதிப்பு அடையக்கூடிய இடத்தில் வசித்து வருகின்றனர்.

வியட்நாமில் கடந்த ஒருவாரமாக பெய்த கனமழையால் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, அந்நாட்டின் பேரிடர் தடுப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இந்த மாதம் தொடக்கத்தில் கல்மேகி சூறாவளி மற்றும் கனமழையால் வியட்நாம் வெள்ளம் கரைபுரண்டு ஓடி பெரிய அழிவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த ஒருவாரமாக பெய்த கனமழை மேலும் புரட்டிப்போட்டுள்ளது.

கனமழை காரணமாக பல வியட்நாமின் மத்திய மலைப் பகுதிகளில் அதிக அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ரெயில் தண்டவாளங்கள், சாலை வழிகள் மிகப்பெரிய அளவில் சேதம் அடைந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து இன்றி சிரமப்பட்டனர்.

உலகத்திலேயே வெள்ளத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக வியட்நாம் திகழ்கிறது. வியட்நாம் மக்கள் தொகையில பாதிபேர் மிகவும் பாதிப்பு அடையக்கூடிய இடத்தில் வசித்து வருகின்றனர்.

தென்கிழக்கு ஆசியா முழுவதும் காலநிலை மாற்றத்தால் தீவிர புயல்கள் மற்றும் மழையால் அழிவுக்கான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

Tags:    

Similar News