உலகம்

சீனா மீண்டும் பதிலடி: அமெரிக்க பொருட்களுக்கு 125% வரி விதித்தது

Published On 2025-04-11 16:53 IST   |   Update On 2025-04-11 16:53:00 IST
  • சீனா 84 சதவீதம் வரி விதித்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்திருந்தது.
  • அதற்கு அமெரிக்கா 145 சதவீதம் வரியை உயர்த்தியது. இதற்கும் சீனா பதிலடி கொடுத்துள்ளது.

அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்கா இறக்குமதி செய்யும் மற்ற நாடுகளின் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

ஏப்ரல் தொடக்கத்தில் அதை நடைமுறைப்படுத்தினார். இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதித்தார். அதேபோல் சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கும் வரி விதித்தார்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த வரி விதிப்புக்கு எதிர்வினையாற்றவில்லை. ஆனால், சீனா அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகரித்து வருகிறது.

இதனால் கோபம் அடைந்த டொனால்டு டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 145 சதவீதம் வரி விதித்தார். இதற்கும் சீனா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 125 சதவீதம் வரி விதித்துள்ளது.

முன்னதாக 84 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 125 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பிடமும் சீனா முறையிட்டுள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு தடைவிதித்துள்ளது. இந்த விசயம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News