உலகம்

புர்ஜ் கலிபாவில் லேசரில் ஒளிர்ந்த அமெரிக்க கொடி

Published On 2025-05-16 00:24 IST   |   Update On 2025-05-16 00:24:00 IST
  • துபாயில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ளது.
  • அந்த புர்ஜ் கலிபா கட்டிடத்தில் அமெரிக்கக் கொடி ஒளிபரப்பானது.

துபாய்:

சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் துபாய் நாட்டில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ளது.

சுமார் 124 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிபா கட்டிடத்தில் நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இது 2,717 அடி (828 மீட்டர்) உயரம் கொண்டது. முழுவதும் கருப்பு நிற சலவைக்கற்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிகளால் இந்தக் கட்டிடம் வடிவமைக்கப்பட்டது.

இந்தக் கட்டிடத்தை ஒட்டியுள்ள நீர்நிலையில் லேசர் ஒளிவெள்ளத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது.

புர்ஜ் கலிபா மற்றும் துபாயில் உள்ள பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்காக உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாவாசிகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர்.

இதற்கிடையே, துபாயில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் துபாயில் வந்துள்ளதை முன்னிட்டு, புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியால் அமெரிக்கக் கொடி ஒளிபரப்பானது.

Tags:    

Similar News