உலகம்

ஓய்வூதிய மோசடி எதிரொலி: மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் கார்லோஸ் லூபி

Published On 2025-05-04 04:51 IST   |   Update On 2025-05-04 04:51:00 IST
  • பிரேசிலில் சமூக பாதுகாப்புத் துறை மந்திரியாக உள்ளவர் கார்லோஸ் லூபி.
  • ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் இருந்து சுமார் ரூ.9,000 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

பிரேசிலியா:

பிரேசிலில் அதிபர் லுலா டா சில்வா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவரது அமைச்சரவையில் சமூக பாதுகாப்புத் துறை மந்திரியாக உள்ளவர் கார்லோஸ் லூபி.

ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் இருந்து சுமார் ரூ.9,000 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, கார்லோஸ் வீட்டில் நுழைந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சொகுசு கார், நகை உள்பட ரூ.1,500 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, கார்லோஸ் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்தன.

இந்நிலையில், கார்லோஸ் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Tags:    

Similar News