உலகம்

கோப்பு படம்

அமெரிக்காவில் ரெயில் மோதி ஆந்திராவைச் சேர்ந்தவர் பலி

Published On 2023-03-07 19:12 IST   |   Update On 2023-03-07 19:12:00 IST
  • தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
  • அவரது குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில், நண்பர்கள் நிதி திரட்டி வருகின்றனர்.

நியூயார்க்:

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் ரெயில் மோதியதில் ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் திகாலா (வயது 39) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் கடந்த மாதம் 28ம் தேதி பிரின்ஸ்டன் ரெயில்வே சந்திப்பின் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, வாஷிங்டனில் இருந்து பாஸ்டன் நோக்கி சென்ற அம்த்ரக் ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட திகாலா, அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம் பிளைன்ஸ்போரோவில் வசித்து வந்தார். அவருக்கு மனைவி மற்றும் 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். திகாலா மட்டுமே வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்தியாவில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் மாமனார், மாமியாரையும் அவரை கவனித்து வந்துள்ளார். அவர் மரணம் அடைந்தையடுத்து அவரது குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில், நண்பர்கள் நிதி திரட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News