உலகம்

சிங்கப்பூர் தேவாலயத்தில் போலி வெடிகுண்டு வைத்த இந்திய வம்சாவளி இளைஞர் கைது

Published On 2025-12-23 00:26 IST   |   Update On 2025-12-23 00:26:00 IST
  • இந்தச் செயலில் ஈடுபட்டதாக 26 வயதான கோகுலானந்தன் மோகன் கைது செய்யப்பட்டார்.
  • குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் போலி வெடிகுண்டு வைத்து பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி இளைஞரை அந்நாட்டுப் போலீசார் கைது செய்துள்ளனர்.

சிங்கப்பூரின் அப்பர் புக்கிட் திமா பகுதியில் உள்ள புனித ஜோசப் தேவாலயத்தில் நேற்று காலை பிரார்த்தனைக்காக வந்தவர்கள், வெடிகுண்டு போன்று காட்சியளித்த சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்றை கண்டனர்.

கருப்பு மற்றும் மஞ்சள் நிற டேப் சுற்றப்பட்டு, கார்ட்போர்டு அட்டையை சுருட்டி சிவப்பு நிற வயர்கள் இணைக்கப்பட்டிருந்தது.

தகவல் அறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

சோதனையில், அதற்குள் கற்கள் நிரப்பப்பட்டிருப்பதும், அது போலி வெடிகுண்டு என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்தச் செயலில் ஈடுபட்டதாக 26 வயதான கோகுலானந்தன் மோகன் என்ற இந்திய வம்சாவளி இளைஞரைச் சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News