ஆபத்தில் உதவிய அன்பு சகோதரர்.. துருக்கி அதிபரை நேரில் சந்தித்து பாகிஸ்தான் பிரதமர் முக்கிய ஆலோசனை!
- துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் உடன் இஸ்தான்புல்லில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
- எர்டோகனின் வலுவான ஆதரவிற்கு ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் நீடிப்பதால், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் துருக்கி சென்றுள்ளார். அங்கு துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் உடன் இஸ்தான்புல்லில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி இந்த சந்திப்பில் முதன்மையாக கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக எரிசக்தி, வர்த்தகம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தியாவுடனான மோதலின் போது எர்டோகனின் வலுவான ஆதரவிற்கு ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார்.
சந்திப்புக்குப் பிறகு, ஷெபாஸ் ஷெரீப் 'எக்ஸ்' மேடையில் பதிலளித்து, "இன்று இஸ்தான்புல்லில் எனது அன்பு சகோதரர் அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனைச் சந்தித்தது ஒரு மரியாதை.
சமீபத்திய பாகிஸ்தான்-இந்தியா மோதலின் போது எங்களுக்கு அவர் அளித்த உறுதியான ஆதரவிற்கு நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்" என்று கூறினார்.