இந்த ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட '67' ஏன் தெரியுமா?
- இதன் அர்த்தம் என்னவென்று தெரியாமல் பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
- ஆசிரியர்கள் 67 என்ற எண்ணையே மாணவர்கள் உச்சரிக்க தடை விதிக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.
Dictionary.com 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக ``67'' ஐத் தேர்ந்தெடுத்துள்ளது. 67 என்ற எண்ணை வார்த்தையாக தேர்தெடுத்திருப்பது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
இதற்கு காரணம் 67 என்பது ஒரு எண்ணாக அல்லாமல் குறியீடாக இருப்பதே ஆகும். அண்மை காலங்களாக சமூக வலைத்தளங்களில் கஜென் ஆல்பா சிறுவர் சிறுமிகள் 67 என்ற எண்ணை அதிகம் பதிவிடுகின்றனர்.
2010 and 2024 இடையில் பிறந்தவர்கள் ஜென் ஆல்பா ஆவர். அவர்களுக்கு 67 என்பது உற்சாகத்தை வெளிப்படுத்ததும் ஒரு குறியீட்டு வழியாக மாறியுள்ளது. டிக்டாககில் 67 என்ற ஹேஷ்டேக் 2 மில்லியன் பதிவுகளை தாண்டியுள்ளது.
இதன் அர்த்தம் என்னவென்று தெரியாமல் பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
டிரெண்டின் படி, இதை 'அறுபத்தி ஏழு' என்று உச்சரிக்காமல், 'சிக்ஸ்-செவன்' என்றுதான் சொல்ல வேண்டும்.
67 எப்படி குறியீடாக மாறியது என்பது உறுதியாகத் தெரியவில்லை. இதற்கு ஒரு நிலையான வரையறை இல்லை, அதன் பயன்பாடு சூழலுக்கு சூழல் மாறுபடும் என்று Dictionary.com தெரிவித்துள்ளது.
இதன் பயன்பாடு, அமெரிக்க ராப் பாடகர் ஸ்க்ரில்லாவின் 'Doot Doot (6 7)' என்ற பாடலில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பள்ளிகளில் வகுப்பில் சில மாணவர்கள் ஆறு என்று சொல்லும்போது, மற்றவர்கள் ஏழு என்று கத்துகின்றனர். ஆசிரியர்கள் 67 என்ற எண்ணையே மாணவர்கள் உச்சரிக்க தடை விதிக்கும் அளவுக்கு 67 என்பது இளைய தலைமுறையின் குறியீடாக மாறியுள்ளது.