உலகம்
விமானம் (கோப்புப்படம்)

அமெரிக்காவில் ஒரே நாளில் முக்கிய நகரங்களுக்கு செல்லும் 1200 விமானங்கள் ரத்து

Published On 2022-05-30 05:16 GMT   |   Update On 2022-05-30 05:16 GMT
மோசமான வானிலை மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.
அட்லாண்டா:

அமெரிக்காவில் வார இறுதி நாட்களில் பலரும் வெளியூர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் விமான பயணம் மேற்கொள்வது வழக்கம்.

இதற்காக அவர்கள் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பார்கள். வானிலை மோசமாக இருந்தால் விமானங்கள் ரத்து செய்யப்படும்.

இதனை விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவில் பல்வேறு விமான நிறுவனங்கள் இந்த வாரம் பல விமானங்களை ரத்து செய்தது.

அதன்படி அமெரிக்காவில் நேற்று மட்டும் 1200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 1500 விமானங்களும், 27-ந் தேதி 2300 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.

மோசமான வானிலை மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக விமான நிறுவன அதிகாரிகள் கூறும்போது, இதற்கு முன்பு இதுபோன்ற நிலை ஏற்பட்டதில்லை. இப்போதுதான் அதிக அளவில் விமானங்களை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது, என்றனர்.
Tags:    

Similar News