உலகம்

ஏமனில் உள்ள மீதமுள்ள படைகள் திரும்பப் பெறப்படும்: ஐக்கிய அரபு அமீரகம்

Published On 2025-12-30 21:35 IST   |   Update On 2025-12-30 21:35:00 IST
  • பிரிவினைவாதிகளுக்கு கப்பலில் ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
  • துறைமுகம் மீது சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தின.

ஏமனில் பல ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நடைபெற்று வருகிறது. வடக்குப் பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தெற்குப் பகுதியை பெரும்பாலான உலக நாடுகள் அங்கீகரித்த அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தெற்குப் பகுதியில் பிரிவினைவாதிகள் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. இந்த படைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உதவி செய்து வருகிறது. அதேவேளையில் அரசுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்தான் ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பல் ஏமனில் உள்ள துறைமுகத்தில் காணப்பட்டதாக கூறி, சவுதி கூட்டுப்படைகள் கப்பல் மீது வான் தாக்குதல் நடத்தியது. இன்று காலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் குறித்து இரு தரப்பிலும் முழுமையான விவரங்களை குறிப்பிடவில்லை.

இந்த நிலையில், ஏமனில் உள்ள மீதமுள்ள படைகளை திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. ஆனால் எப்போது திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்படவில்லை.

Tags:    

Similar News