உலகம்
காஞ்சனா விஜேசேகரா

லாரி டிரைவர்கள் தாக்கப்பட்டால் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்படும்: இலங்கை மந்திரி எச்சரிக்கை

Published On 2022-05-23 02:50 GMT   |   Update On 2022-05-23 02:50 GMT
லாரி டிரைவர்கள் தாக்கப்பட்டால், எரிபொருள் லாரி டிரைவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எரிபொருள் வினியோகத்தை நிறுத்தவேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு:

பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில் இருக்கும் இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கும், சமையல் கியாசுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பெட்ரோல், சமையல் கியாஸ் நிலையங்கள் முன் நாள்கணக்கில் காத்திருத்தும் அவற்றைப் பெற முடியாத பொதுமக்கள் கொந்தளித்து போயுள்ளனர்.

இந்நிலையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி மந்திரி காஞ்சனா விஜேசேகரா நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'எரிபொருள் லாரிகளை சில குழுக்கள் தடுத்து நிறுத்துவதாகவும், தாங்கள் சொல்லும் இடத்தில் எரிபொருளை இறக்க வேண்டும், இல்லாவிட்டால் தீ வைப்போம் என்று மிரட்டுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. லாரி டிரைவர்கள் தாக்கப்பட்டால், எரிபொருள் லாரி டிரைவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எரிபொருள் வினியோகத்தை நிறுத்தவேண்டிய நிலை ஏற்படும்' என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், எரிபொருள் பதுக்கல் தொடர்பாக நேற்று இலங்கை போலீசார் நாடளாவிய சோதனையை தொடங்கினர்.
Tags:    

Similar News