உலகம்
கூகுள் ஆல்பபெட்

பணத்தை அள்ளி குவிக்கும் கூகுளின் தாய் நிறுவனம்- பங்குதாரர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு

Published On 2022-02-02 05:32 GMT   |   Update On 2022-02-02 05:32 GMT
கடந்த நான்காவது காலாண்டில் ஆல்பாபெட்டின் விற்பனை 32% உயர்ந்து 7500 கோடி டாலராக உயர்ந்தது.
வாஷிங்டன்:

கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் பங்குகள் வர்த்தக நேரத்திற்கு பிறகு 8%-க்கும் மெல் அதிவேகமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்நிறுவனம் தனது பங்குகளை 1-க்கு 20 என்ற வகையில் பிரித்து தரவுள்ளது. ( ஆல்பபெட்டின் ஒரு பங்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக 19 பங்குகள் கிடைக்கும்.)

இதன்மூலம் சிறு முதலீட்டாளர்களுக்கும் ஆல்பபெட்டின் பங்குகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வணிக நிபுணர்கள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு நான்காவது காலாண்டில் ஆல்பாபெட்டின் விற்பனை 32% உயர்ந்து 7500 கோடி டாலராக உயர்ந்தது.  சாதாரண நுகர்வோர் ஆடை மற்றும் பொழுதுபோக்குப் பொருட்களை கூகுளில் தேடுகின்றனர். 

சில்லறை வணிகம், நிதி, பொழுதுபோக்கு மற்றும் பயண விளம்பரதாரர்கள் அதிக விளம்பரத்திற்காக செலவிடுகிறார்கள். குறிப்பாக கொரோனா பெருந்தொற்று பலரையும் இணையதளத்தை நோக்கி நகர்த்தியுள்ளது.

வணிகர்கள் அதிகம் டிஜிட்டல் விளம்பரங்களில் செலவிட விரும்புகின்றனர். கூகுள் நிறுவனம் இணைய விளம்பரங்களில் இருந்தே அதிகம் வருமானம் ஈட்டுகிறது. எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி கணிக்க முடியாததாக இருக்கிறது.

இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News