செய்திகள்
ஸ்மித் போல் காணப்படும் அமெரிக்க படைவீரர்

ஸ்டீவ் ஸ்மித் போல் உருவ ஒற்றுமை கொண்ட அமெரிக்க படைவீரர் - வைரலாகும் புகைப்படம்

Published On 2021-08-23 05:30 IST   |   Update On 2021-08-23 05:30:00 IST
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் பல்வேறு நாடுகள் தங்களின் தூதர்கள், குடிமக்களை வெளியேற்றி வருகின்றன.
காபூல்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் பணியில் இருந்த அமெரிக்க ராணுவ வீரரின் படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

அந்தப் படத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் முக சாயலுடன் ஒத்துப்போவதைக் கண்டனர். இதையடுத்து, அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களிலும் பலர் தங்களுக்கு பிடித்த கமெண்டகளை பதிவிட்டு வருகின்றனர்.



அமெரிக்க ராணுவ வீரர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை போலவே இருக்கிறார் என ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பயனர், "... இதோ உங்கள் ஆடு. அவர் தனது நேரத்தை வீணாக்கமல் உயிர்களை காப்பாற்றுகிறார்" என்றார்.

மற்றொருவர், "ஸ்டீவ் ஸ்மித் என்ன செய்கிறார்? உண்மையில் இது பெரிய வேலை என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க ராணுவத்தில் ஸ்டீவ் ஸ்மித் என்ன செய்கிறார்? என மற்றொரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே, டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் விளையாடும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Similar News