செய்திகள்
கோப்புப்படம்

ஓமனில் அரசு, தனியார் பள்ளிக்கூடங்கள் நவம்பர் 1-ந் தேதி திறப்பு

Published On 2020-09-12 04:20 GMT   |   Update On 2020-09-12 04:20 GMT
ஓமனில் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் நவம்பர் 1-ந் தேதி திறக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
மஸ்கட்:

ஓமன் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓமன் சுப்ரீம் கமிட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் ஓமனில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களையும் சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வருகிற நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்.

பள்ளிக்கூடங்களில் 3 முதல் அதிகபட்சமாக 5 மணி நேரம் மட்டுமே பாடவகுப்புகள் நடைபெறும். குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் உடைய பள்ளிக்கூடங்கள் 3 மணி நேரமும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்கள் 4 மணி நேரமும் செயல்படும்.

1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் முககவசங்களை அணிய தேவையில்லை. ஒருவேளை பெற்றோர்கள் பள்ளிக்கூடத்திற்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப விருப்பமில்லை என்றால் ஆன்லைன் பாடவகுப்புகளை தேர்வு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. பள்ளிக்கூட பஸ்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சமூக இடைவெளி, கிருமி நாசினி நீக்க பணிகளுடன் வகுப்பறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News