செய்திகள்

ஆப்கானிஸ்தான் அதிபரின் பதவிக் காலத்தை நீட்டிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி

Published On 2019-04-21 11:16 GMT   |   Update On 2019-04-21 11:16 GMT
ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதிபர் அஷரப் கானியின் பதவிக் காலத்தை நீட்டிக்க சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. #Afghanpresident #Afghansupremecourt #AshrafGhani #AshrafGhaniterm
காபுல்:

தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க பாதுகாப்புப்படைகள் வாபஸ் பெறப்பபட்ட மூன்றாண்டுகளுக்கு பின்னர் கடந்த 2014-ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகார்கள் எழுந்தன. நியாயமான வகையில் அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உள்ளூர் மக்களும் சர்வதேச அரசியல் நோக்கர்களும் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், புதிய வாக்களர்கள் கணக்கெடுப்பு மற்றும் பாதுகாப்பு நிலவரங்களை காரணம் காட்டி அடுத்தடுத்து தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

ஆப்கானிஸ்தான்  நாட்டின் அதிபர் தேர்தல் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் 20-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டிய நிலையில் திடீரென்று ஜூலை 20-ம் தேதிக்கும் பின்னர் செப்டம்பர் 28-ம் தேதிக்கும் அடுத்தடுத்து தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதைய அதிபர் அஷ்ரப் கானியின் ஐந்தாண்டு பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைவதால் அதிபர் தேர்தல் நடந்து முடிந்து, புதிய அதிபர் பதவியேற்கும் வரை அதிபர் அஷரப் கானியின் பதவிக் காலத்தை நீட்டிக்க சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. #Afghanpresident #Afghansupremecourt #AshrafGhani  #AshrafGhaniterm 
Tags:    

Similar News