செய்திகள்

பிரான்சை தொடர்ந்து மசூத் அசார் தடைக்கு ஜெர்மனி ஆதரவு

Published On 2019-03-20 06:09 GMT   |   Update On 2019-03-20 06:09 GMT
பயங்கரவாதி மசூத் அசாருக்கு எதிராக பிரான்சு கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது. #MasoodAzhar
பெர்லின்:

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத அமைப்பு தலைவர் மவுலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்க கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் தீர்மானம் கொண்டு வந்தது. அதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி 4-வது தடவையாக தடுத்து நிறுத்தியது.



இதற்கிடையே புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரத்தை சர்வதேச நாடுகளிடம் இந்தியா கொண்டு சென்றது. அதை தொடர்ந்து பயங்கரவாதி மசூத் அசாருக்கு எதிராக பிரான்சு கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவு பெருகியுள்ளது.

தீர்மானத்துக்கு தற்போது ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த தகவலை இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் ஹன்ஸ் கிறிஸ்டியன் வின்கலர் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து ஐரோப்பிய யூனியனில் ஆலோசிக்கப்பட்டது.அதில் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் அனைத்தும் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க கோரும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதன் மூலம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 உறுப்பினர்களில் 14 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துள்ளன. #MasoodAzhar
Tags:    

Similar News