செய்திகள்

2019ம் ஆண்டின் தொடக்கத்தில் டிரம்ப் - கிம் சந்திப்பு நடைபெறும் - மைக் பாம்பியோ

Published On 2018-12-20 18:26 GMT   |   Update On 2018-12-20 18:26 GMT
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என நம்புவதாக வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். #DonaldTrump #KimJongUn
வாஷிங்டன்:

வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.
 
இதற்கிடையே, டிரம்ப் - கிம் சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி நடைபெற்றது. அப்போது இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர்.



அப்போது, தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனைக் கூடங்களை அழித்து விடுவோம். இனி அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ள மாட்டோம் என்று வடகொரியா அறிவித்தது. அதேபோல், அமெரிக்காவும் வடகொரியா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்குவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என நம்புவதாக வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அப்போது, இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். #DonaldTrump #KimJongUn
Tags:    

Similar News