செய்திகள்

மியான்மரில் ஆங் சான் சூகியுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

Published On 2018-12-11 09:38 GMT   |   Update On 2018-12-11 09:38 GMT
அரசுமுறை பயணமாக மியான்மர் வந்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆளும்கட்சி தலைவர் ஆங் சான் சூகியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். #KovindmeetsSuuKyi #IndiaMyanmarMoUs
நய்பிடா:

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசுமுறை பயணமாக மியான்மர் வந்துள்ளார். மியான்மர் அதிபர் உ வின் மின்ட்-ஐ இன்று சந்தித்த அவர், மியான்மர்-இந்தியா இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினார்.

நீதித்துறை பயிற்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இருநாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவை பலப்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த ஆலோசனையின்போது கையொப்பமாகின.


மேலும், சமீபத்தில் கலவர பூமியாக இருந்த ரக்கினே மாகாணத்தில் இந்தியா கட்டித்தந்துள்ள 250 வீடுகள் மியான்மர் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு இங்கு வந்து சேர்ந்த பின்னர் உடனடியாக விசா அளிக்கும் சலுகையை மியான்மர் அரசு இன்று அறிவித்துள்ளது.

அதிபருடனான சந்திப்புக்கு பின்னர் மியான்மர் நாட்டின் ஆளும்கட்சி தலைவரான ஆங் சான் சூகி-யையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்தித்துப் பேசினார். #KovindmeetsSuuKyi #IndiaMyanmarMoUs
Tags:    

Similar News