செய்திகள்

பத்திரிகையாளர் கஷோகியை கொன்றது யார்? என இரு நாட்களில் அம்பலப்படுத்துவோம் -டிரம்ப்

Published On 2018-11-18 05:47 GMT   |   Update On 2018-11-18 05:47 GMT
சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை கொன்றது யார்? என இன்னும் இரு நாட்களில் அமெரிக்கா அம்பலப்படுத்தும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #Khashoggi #SaudiPrince
வாஷிங்டன்:

துருக்கி நாட்டு தூதரகத்தில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை மயக்க மருந்து கொடுத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் மீது அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ. நேற்று குற்றம்சாட்டியுள்ளது. 



சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் என்பதால் நாட்டின் அனைத்து விவகாரங்களிலும் முக்கிய முடிவெடுக்கும் முஹம்மது பின் சல்மானின் உத்தரவு இல்லாமலும், கவனத்துக்கு வராலும் இதுபோன்ற எந்த காரியமும் நடக்க முடியாது என சி.ஐ.ஏ. உயரதிகாரி ஒருவரும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மாலிபு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜமால் கஷோக்கியை கொன்றது யார்? எப்படி கொல்லப்பட்டார் என்பது தொடர்பான முழு விபரங்களை இன்னும் ஓரிரு நாட்களில் பகிரங்கப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார். #Khashoggi #SaudiPrince #CIA #Trump
Tags:    

Similar News