இந்தியா

புத்தர் கண்காட்சி: டெல்லியில் இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

Published On 2026-01-03 03:14 IST   |   Update On 2026-01-03 03:14:00 IST
  • டெல்லியில் புத்தர் தொடர்பான மாபெரும் சர்வதேச கண்காட்சி இன்று தொடங்குகிறது.
  • பிரதமர் மோடி இந்தக் கண்காட்சியை இன்று காலை திறந்து வைக்கிறார்.

புதுடெல்லி:

புத்தர் தொடர்பான புனித பிப்ரஹ்வா நினைவுச் சின்னங்களின் 'ஒளியும் தாமரையும்: ஞானம் பெற்றவரின் நினைவுச் சின்னங்கள்' என்ற மாபெரும் சர்வதேசக் கண்காட்சி டெல்லியில் இன்று தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கண்காட்சியை இன்று காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

வரலாறு, கலாசாரம் மற்றும் பகவான் புத்தரின் கொள்கைகள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு மிகச் சிறப்பான நாள்.

புத்தரின் உன்னதமான சிந்தனைகளை மேலும் பிரபலப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு இணங்க அமைந்துள்ளது.

இது நமது இளைஞர்களுக்கும் நமது செழுமையான கலாசாரத்திற்கும் இடையிலான பிணைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கான ஒரு முயற்சி. இந்த நினைவுச் சின்னங்களைத் தாயகம் கொண்டுவர உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News