செய்திகள்

இந்திய பத்திரிகையாளருக்கு பிரிட்டன் நாட்டின் உயரிய விருது

Published On 2018-11-09 17:28 IST   |   Update On 2018-11-09 17:28:00 IST
வீரதீரத்துடன் பணியாற்றியதற்காக இந்தியாவை சேர்ந்த பெண் பத்திரிகையாளரான சுவாதி சதுர்வேதிக்கு லண்டன் பத்திரிகையாளர் அமைப்பின் உயரிய விருது வழங்கப்பட்டது. #Indianjournalist #SwatiChaturvedi #PressFreedomAward
லண்டன்:

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் இயங்கிவரும் ‘எல்லைகளில்லாத பத்திரிகை நிருபர்கள்’ என்ற அமைப்பிற்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த அமைப்பின் பிரிட்டன் கிளை சார்பில் பத்திரிகை சுதந்திரத்துக்காக வீரதீரத்துடன் பணியாற்றும் நபர்களுக்கு விருதுகள் அளிக்க கடந்த ஆண்டு தீர்மானிக்கப்பட்டது.

அவ்வகையில், முதல் ஆண்டு விருதுக்கு இந்தியாவை சேர்ந்த பெண் பத்திரிகையாளரான சுவாதி சதுர்வேதியை லண்டன் பத்திரிகையாளர்கள் அமைப்பு தேர்வு செய்தது.


இந்தியாவில் பிரதமர் மோடியின் அரசுக்கு எதிராக தெரிவிக்கப்படும் எதிர்மறை விமர்சனங்களுக்கு எதிர் விமர்சனம் தெரிவிப்பதற்காக இணையதளங்களில் நடைபெறும் ‘டுரோல்’ பிரசாரம் தொடர்பாக தைரியமாக தனது  'I am a Troll: Inside the Secret World of the BJP's Digital Army' என்னும் நூலில் எழுதியதற்காக சுவாதி சதுர்வேதி இந்த விருதுக்கு தேர்வானார்.

லண்டன் நகரில் உள்ள கெட்டி இமேஜஸ் அலுவலக கருத்தரங்கில் நேற்று நடந்த விழாவில் சுவாதிக்கு இந்த விருது அளிக்கப்பட்டது. #Indianjournalist #SwatiChaturvedi #PressFreedomAward  
Tags:    

Similar News