செய்திகள்

189 பேர் உடன் கடலில் விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

Published On 2018-11-01 05:56 GMT   |   Update On 2018-11-01 08:45 GMT
இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டு ஜாவா கடலில் விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவுக்கு சென்ற ‘லயன் ஏர்’ பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 178 பயணிகள், 2 பச்சிளங் குழந்தைகள், ஒரு சிறுவன், 2 விமானிகள், 6 பணியாளர்கள் என 189 பேர் பலியானார்கள். இந்தோனேசிய நிதித்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய 20 ஊழியர்களும் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.

விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், மீட்புப் படை அப்பகுதிக்கு விரைந்தது. ஜகார்த்தா, பாண்டுங், லம்பங் ஆகிய பகுதிகளில் இருந்து படகுகள், ஹெலிகாப்டர்கள், கடற்படை கப்பல்கள் தேடும் பணிக்கு அனுப்பப்பட்டன. மீட்புக் குழுவினர் பயணிகள் சிலரது உடல்கள், ஆவணங்களை மீட்டுள்ளனர்.


விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. 115 அடி ஆழத்தில் விமானத்தின் முக்கிய பாகங்கள் கிடக்கக் கூடும் என கூறப்பட்டது. இந்நிலையில் லயன் ஏர் விமானத்தின் ஒரு கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது. ஆனால் அதில் காக்பிட் வாய்ஸ் ரெகார்டர் குறித்து நாங்கள் இன்னும் ஏதும் அறியவில்லை. ஆய்விற்குப் பின் தெரியவரும்.

கருப்புப் பெட்டி கிடைத்துள்ளதால் விமானத்தின் விபத்திற்கான முழு விவரம் விரைவில் தெரிய வர வாய்ப்புள்ளது.  #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir 
Tags:    

Similar News