செய்திகள்

இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும்- பிரதமர் இம்ரான்கான்

Published On 2018-10-24 10:47 GMT   |   Update On 2018-10-24 10:47 GMT
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்தியாவுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். #PakistanPM #Imrankhan
ரியாத்:

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் ஆட்சிக்கு வந்ததும் முதலில் அண்டை நாடான இந்தியாவுடன் நட்புறவை பேண எனது கையை நீட்ட முயற்சித்தேன். அது மறுக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டது. எனவே இந்தியாவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக காத்திருக்கிறோம்.

எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மீண்டும் இந்தியாவுடன் அமைதி பேச்சு வார்த்தை நடைபெறும் என கருதுகிறேன் என்றார்.

ஐ.நா. சபை கூட்டத்தின் போது இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்தித்து பேசுவது என கடந்த செப்டம்பரில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலால் பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. இதை தான் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார். #PakistanPM #Imrankhan
Tags:    

Similar News