செய்திகள்

நேபாளம் பனிப்புயலில் சிக்கி மலையேற்றக் குழுவை சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு

Published On 2018-10-13 09:10 GMT   |   Update On 2018-10-13 09:10 GMT
நேபாளம் நாட்டில் பனிப்புயலில் சிக்கி தென்கொரியா மலையேற்றக் குழுவை சேர்ந்த 8 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #MountGurja #eightclimberskilled #Nepalpeak
காத்மாண்டு:

நேபாளம் நாட்டின் அன்னப்பூர்ணா பகுதியில் 7,193 மீட்டர் உயரமுள்ள குர்ஜா என்னும் மலை உள்ளது. உலகின் மிகவும் உயரமான 14-வது மலையாக கருதப்படும் இங்கு அடிக்கடி பனிப்புயல் வீசுவதுண்டு.

இருப்பினும், சவாலான இந்த மலையை ஏறி சிகரத்தின் உச்சியை தொடும் உற்சாகத்தை அனுபவிப்பதற்காக உள்நாட்டினர் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த மலையேற்றக் குழுவினரும் இந்த குர்ஜா மலையை அதிகம் விரும்புகின்றனர்.



அவ்வகையில், தென்கொரியா மலையேற்றக் குழுவை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக சென்ற நேபாளத்தினர் உள்பட 8 பேர் வீசிய பனிப்புயலில் சிக்கி உயிரிழந்ததாக  இன்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #MountGurja #eightclimberskilled #Nepalpeak
Tags:    

Similar News