செய்திகள்

அமெரிக்காவில் வாஷிங்டனில் மரண தண்டனை ஒழிப்பு

Published On 2018-10-12 15:22 IST   |   Update On 2018-10-12 15:22:00 IST
அமெரிக்காவில் ஏற்கனவே 19 மாநிலங்களில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் 20-வது மாநிலமாக வாஷிங்டனிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. #DeathPenalty
வாஷிங்டன்:

அமெரிக்காவில் ஏற்கனவே 19 மாநிலங்களில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வாஷிங்டனிலும் அந்த தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரசார இயக்கம் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அங்கு மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மரண தண்டனைக்கு எதிராக பிரசார இயக்கம் மேற்கொண்டவர்கள் இதனை வரவேற்றுள்ளனர். இந்த தண்டனை ஒழிக்கப்பட்டதன் மூலம் மரணத்தை எதிர்நோக்கி இருந்த 8 பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 23 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் வாஷிங்டன் மாகாணத்தில் 2010-ம் ஆண்டில் இருந்து இதுவரை யாருக்கும் அந்த தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

அமெரிக்காவில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டதில் வாஷிங்டன் 20-வது மாநிலம் ஆகும். #DeathPenalty
Tags:    

Similar News