செய்திகள்

பாகிஸ்தானின் 13-வது அதிபராக பதவியேற்றார் டாக்டர் ஆரிப் ஆல்வி

Published On 2018-09-09 08:39 GMT   |   Update On 2018-09-09 08:39 GMT
பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் ஆளும் பிடிஐ கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற டாக்டர் ஆரிப் ஆல்வி, 13-வது அதிபராக இன்று பதவியேற்றுக்கொண்டார். #PakistanPresident #DrArifAlvi
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேனின் ஐந்தாண்டு பதவிக்காலம் நிறைவடைவதால் அந்த பதவிக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளுங்கட்சியான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் போட்டியிட்ட பல் மருத்துவரான டாக்டர் ஆரிப் ஆல்வி (வயது 69) வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தலில் பதிவான 430 வாக்குகளில் டாக்டர் ஆரிப் ஆல்வி 212 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜாமியத் உலமா இ இஸ்லாம் கட்சித்தலைவர் மவுலானா பசுலுர் ரெஹ்மான் 131 வாக்குகளையும் பெற்றனர். பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த ஐட்ஜாஸ் அஹ்ஸன் 81 வாக்குகள் பெற்றார். 

இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் இன்று நடந்த பதவியேற்பு விழாவில் ஆரிப் ஆல்வி அதிபராக பதவியேற்றுக்கொண்டார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மியான் சாகிப் நிஸார் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் பிரதமர் இம்ரான் கான், முன்னாள் ஜனாதிபதி மம்னூன் உசைன், ராணுவ தளபதி கமார் ஜாவீத் பஜ்வா, அனைத்து துறை மந்திரிகள், மூத்த அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.  #PakistanPresident #DrArifAlvi
Tags:    

Similar News