செய்திகள்

நேருவுக்கு பல் டாக்டராக இருந்த பாகிஸ்தான் ஜனாதிபதியின் தந்தை

Published On 2018-09-05 11:41 IST   |   Update On 2018-09-05 11:41:00 IST
பாகிஸ்தான் ஜனாதிபதியின் தந்தையான ஸ்ரீபீப் உர் ரஹ்மான் இலாஹி ஆல்வி மறைந்த இந்திய பிரதமர் நேருவுக்கு பல் டாக்டராக இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. #JawaharlalNehru #ArifAlvi
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக டாக்டர் ஆரிப் ஆல்வி (69). தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சியை சேர்ந்த இவர் ஒரு பல் டாக்டர் ஆவார். இவரது தந்தை ஸ்ரீபீப் உர் ரஹ்மான் இலாஹி ஆல்வியும் ஒரு பல் டாக்டர் ஆவார். இவர் மறைந்த இந்திய பிரதமர் நேருவுக்கு பல் டாக்டராக இருந்தார். நாடு பிரிவினைக்கு பின் பாகிஸ்தான் சென்ற அவர் கராச்சியில் தங்கினார். இந்த தகவல் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



அதில், புதிய ஜனாதிபதி ஆரிப் ஆல்விக்கு இந்தியாவுடன் ஆன தொடர்பு குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மம்னுன் உசேன் பெற்றோர் ஆக்ராவை சேர்ந்தவர்கள். அதே போன்று முன்னாள் அதிபர் பர்வேஷ் மு‌ஷரப் பெற்றோர் புதுடெல்லியை சேர்ந்தவர்கள். நாடு பிரிவினையின் போது அவர்கள் பாகிஸ்தான் சென்று குடியேறினர். #JawaharlalNehru #ArifAlvi
Tags:    

Similar News