செய்திகள்

குழந்தைகளுக்கு ‘செக்ஸ்’ தொல்லை - கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு போப் ஆண்டவர் எச்சரிக்கை

Published On 2018-08-26 05:42 GMT   |   Update On 2018-08-26 05:42 GMT
குழந்தைகள் கல்வி குறித்து சிந்திக்க வேண்டியவர்கள் செக்ஸ் தொல்லை கொடுத்திருப்பதால் கிறிஸ்தவ மதகுருக்களுக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் எச்சரிக்கை விடுத்தார். #PopeInIreland
டூப்ளின்:

போப் ஆண்டவர் பிரான்சிஸ் 39 ஆண்டுகளில் முதன் முறையாக அயர்லாந்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதை தொடர்ந்து நடந்த விழாவில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கலந்து கொண்டு பேசினார்.

அயர்லாந்தில் குழந்தைகளுக்கு கிறிஸ்தவ மதகுருக்களால் நிகழ்த்தப்பட்ட வெறுக்கத்தக்க (‘செக்ஸ்’) குற்றங்கள் குறித்து கத்தோலிக்க திருச்சபைகள் போதுமான அளவு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. அதற்காக வெட்கப்படுகிறேன் என்றார்.

அதற்கு முன் அவர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதம் குறித்து பேசினார். குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி குறித்து கவனத்தில் கொள்ள வேண்டிய கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்கள் அவர்களை பாலியல் (செக்ஸ்) துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர்.

இந்த கொடூர நிகழ்வு குறித்து நான் பேசாமல் இருக்க போவதில்லை. பேராயர்கள், மதகுருக்கள், பாதிரியார்கள் போன்ற திருச்சபை ஊழியர்கள் இம்மாதிரியான வெறுக்கதக்க குற்றங்கள் மீது போதுமான நடவடிக்கை எடுக்காததால் அது நியாயமான பெரும் சீற்றத்தை எழுப்பியுள்ளது.

அது கத்தோலிக்க மக்களுக்கு வலியையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதை நானும் உணர்கிறேன். எந்த சூழ்நிலையிலும் இம்மாதிரியான குற்றங்கள் தேவாலயங்களில் நடைபெற அனுமதிக்க போவதில்லை என்றும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் எச்சரிக்கை விடுத்தார். #PopeInIreland #PopeFrancis
Tags:    

Similar News