உலகம்

பாலஸ்தீனத்தை அங்கீகரித்ததால் ஆஸ்திரேலியாவில் யூதர்கள் மீது தாக்குதல் - நேதன்யாகு வாதத்தை நிராகரித்த அல்பனீஸ்

Published On 2025-12-16 05:50 IST   |   Update On 2025-12-16 05:50:00 IST
  • கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் யூத சமூகத்தினருடன் நாம் கைகோர்க்க வேண்டும்.
  • பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான ஆஸ்திரேலியாவின் முடிவை பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாக நேதன்யாகு கண்டித்திருந்தார்.

ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய இருவரும் தந்தை - மகன் என்றும் அவர்கள் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீனத்தை ஆஸ்திரேலியா அங்கீகரித்தது சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த யூத எதிர்ப்பு பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு காரணியாக இருந்தது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றம்சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் நிராகரித்துள்ளார்.

தேசிய ஊடகங்களுக்கு அல்பனீஸ் அளித்த பேட்டியில், அந்த அங்கீகாரத்திற்கும் போண்டி படுகொலைக்கும் ஏதேனும் தொடர்பு இருப்பதாக அவர் நம்புகிறாரா என்று செய்தியாளர் கேட்டபோது, அல்பானீஸ், "இல்லை, நான் அதை சந்தேகிறேன். உலகின் பெரும்பகுதியினர் இரு நாடு தீர்வை மத்திய கிழக்கில் முன்னோக்கிச் செல்லும் வழியாக ஏற்றுக்கொள்கிறார்கள்" என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இது தேசிய ஒற்றுமைக்கான தருணம். நாம் ஒன்றுபட வேண்டும். அசாதாரணமான மற்றும் கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் யூத சமூகத்தினருடன் நாம் கைகோர்க்க வேண்டும்.

இந்த கடினமான நேரத்தில் ஆஸ்திரேலியர்கள் யூத சமூகத்துடன் நிற்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்துவதே எனது வேலை" என்று கூறினார்.

பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான ஆஸ்திரேலியாவின் முடிவை பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாக நேதன்யாகு முன்னதாக கண்டித்திருந்தார். 

Tags:    

Similar News