செய்திகள்

சந்திரனில் உறைந்த நிலையில் ஐஸ் படிமங்கள்- உறுதி செய்தது நாசா

Published On 2018-08-22 12:19 IST   |   Update On 2018-08-22 12:19:00 IST
சந்திரனில் உறைந்த நிலையில் ஐஸ் படிமங்கள் உள்ளதால் அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். #NASA
வாஷிங்டன்:

சந்திரனில் ஆய்வு நடத்த கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் ‘இஸ்ரோ’ நிறுவனம் சந்திராயன்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது.

அந்த விண்கலம் நடத்திய ஆய்வில் சந்திரனில் உறைந்த நிலையில் ஐஸ் படிமங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவை கருப்பு நிறத்திலும், மிகவும் குளிராகவும் இருந்தது. எனவே இங்கு உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது என இஸ்ரோ தெரிவித்தது.

அது குறித்து அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சந்திரனின் தென் துருவத்தில் பெரும்பாலான ஐஸ் படிமங்கள் மிகவும் கடினமான நிலையில் அடர்த்தியாக உள்ளன. அதே நேரத்தில் வடதுருவத்தில் உள்ள ஐஸ் படிமங்கள் பரந்து விரிந்த நிலையில் அடர்த்தியற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே சந்திரனில் சந்திராயன்-1 விண்கலம் கண்டுபிடித்தது ஐஸ் படிமங்கள்தான். ஆகவே அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். #NASA
Tags:    

Similar News