செய்திகள்

அமெரிக்காவில் தொடரும் கொடூரம் - மீண்டும் ஒரு சீக்கியர் கத்தியால் குத்திக் கொலை

Published On 2018-08-17 10:23 IST   |   Update On 2018-08-17 10:23:00 IST
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் மீண்டும் ஒரு சீக்கியர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அங்கு சீக்கியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடப்பது கவலையளிக்கிறது. #USSikhStabbed
வாஷிங்டன்:

அமெரிகாவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்தவர் டெரியோக் சிங். இவர் அப்பகுதியில் சொந்தமாக கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று டெரியோக் சிங் தனது கடையில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாகக் கிடந்தார்.

தகவலறிந்த எசக்ஸ் கவுண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் தெரிய வரவில்லை. 

கடந்த மூன்று வாரங்களில் அமெரிக்காவில் சிறுபான்மை இனத்தவரான சீக்கியர்களை குறிவைத்து தாக்கப்படும் மூன்றாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சீக்கியர்கள் மீதான தாக்குதலுக்கு அங்குள்ள பல்வேறு இந்திய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. #USSikhStabbed
Tags:    

Similar News