வழிபாடு

weekly rasipalan 14.12.2025 to 20.12.2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்

Published On 2025-12-14 11:45 IST   |   Update On 2025-12-14 11:45:00 IST
  • கடகம் அனுபவ அறிவால் வெற்றி பெறும் நேரம்.தன ஸ்தான அதிபதி சூரியனுக்கு குருவின் பார்வை உள்ளது.
  • சிம்மம் அரசு வகை அனுகூலம் உண்டாகும் வாரம்.

மேஷம்

தடைகள் விலகி மாற்றம் உண்டாகும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைந்து பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதற்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது.தொழிலில் செய்த முதலீடு பல மடங்கு லாபத்தைத் தரும். உழைப் பிற்கு முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. நாணயம் நீடிக்கும். தாய்,தந்தை, சகோதரியிடம் இருந்த கருத்து வேற்றுமை அக லும். விருந்தினர் வருகை வீட்டை கலகலப்பாக்கும். கல்வியில் இருந்த தடை தாமதம் விலகும்.மாமியார் மருமகள் பிணக்கு,தாய் மகள் கருத்து வேறுபாடு மறையும்.போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. வங்கிக் கடன் கிடைப்பதில் இருந்த தடை, தாமதம் அகலும். வரவும் செலவும் சரியாக இருக்கும். அரசுப் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாறுதல் கிடைக்கும். வாழ்க்கைக் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும். உடல் நிலை மேம்படும். சுப விரயங்கள் மிகுதியாகும். 17.12.2025 அன்று காலை 10.26 மணி முதல் 19.12.2025 அன்று இரவு 10.51 மணி வரை சந்திராஷ்டமம் இருப்ப தால் நிதா னத்தை கடைபிடிக்க வேண்டும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு இன்னல்களில் இருந்து உங்களை காக்கும்.

ரிஷபம்

மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் குரு மற்றும் சனியின் பார்வையில் சஞ்சரிக்கிறார்.இழந்த நிம்மதி, சந்தோஷம் உங்களுக்குள் மீண்டும் குடிபுகும். தொழில் ரீதியான பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப் படுத்தும். லாபகரமான நிலைக்கு தொழிலை கொண்டு செல்வீர்கள்.பதவி உயர்வு, உத்தியோகத்தில் இடமாற்றம், மற்றவர்க ளால் மதிக்கப்படக் கூடிய நிலை ஏற்படும்.இழந்த சொத்துக்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும். குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உருவாகும். கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கடன் பிரச்சினையால் நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வீண் செலவு குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். நிதான மாக செயல்பட்டால் அரசு வகையில் யாவும் அனுகூல மாகும். 19.12.2025 அன்று இரவு 10.51 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அன்றைய தினம் உடலுக்கும் மனதுக்கும் சற்றே ஓய்வு கொடுப்பது அவசியம்.குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். விநாயகர் வழிபாட்டால் இன்னல்களில் இருந்து மீள முடியும்.

மிதுனம்

விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு 6ம் இடத்தில் சஞ்சரிக் கிறார். ராசியில் உள்ள வக்ர குருவிற்கு சூரியன் செவ்வாய் சுக்கிரன் பார்வை உள்ளது.தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்பட்டு வருமா னம் கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருந்தாலும் அதன் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர் பார்த்த புதிய வேலை முயற்சி வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.எதிலும் வெற்றி உண்டாகும். குழந்தை கள் உங்கள் சொற்படி கேட்டு நடப்பதால் சந்தோஷம் கொள்வீர்கள். நீண்ட நாட்க ளாக வராமல் இருந்த கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும். பங்கு தாரர்க ளிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும்.வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். அதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மனம் மகிழும் படியான நிகழ்ச்சி நடக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிவ வழிபாடு செய்வதன் மூலம் மகிழ்ச்சி கூடும்.

கடகம்

அனுபவ அறிவால் வெற்றி பெறும் நேரம்.தன ஸ்தான அதிபதி சூரியனுக்கு குருவின் பார்வை உள்ளது.தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சு திறமை கூடும். அக்கம் பக்கத்தினருடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மாறும்.எடுக்கப் பட்ட முயற்சியால் எதையும் சமாளிக்கும் மன வலிமை உண்டாகும் . தடைபட்ட பணிகள் விரைந்து செயல் வடிவம் பெறும். கடன், நோய் எதிரி தொல்லை நிவர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொழில் முதலீடுகளில் விழிப்புணர்வு அவசியம்.உறவினர்கள் நண்பர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும். பணவரத்து வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால் பண பிரச்சினை நீங்கும். வானொலி தொலைக்காட்சி, ஊடக துறையினர் நல்ல மாறுதலும் மேன்மையும் பெறுவர். பெண்கள் குடும்பப் பணிகளை நேர்த்தியாக செய்து முடிப்பார்கள். திருமணம் முயற்சி செயல் வடிவம் பெறும். பொறுப்புகள் அதிகரிக்கும். அரசி யல் வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சீதனம் மகிழ்ச்சியைத் தரும்.பஞ்சமுக தீபம் ஏற்றி சிவனை வழிபடவும்.

சிம்மம்

அரசு வகை அனுகூலம் உண்டாகும் வாரம்.ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருவின் பார்வையில் சஞ்சரிக்கிறார். குலதெய்வ நல்லாசிகள் கிட்டும். ஆன்ம பலம் பெருகும். அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் மிகுந்த ஆதா யத்தை ஏற்படுத்தித் தரும்.புத்திர பிரார்த்தம் உண்டாகும். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பு உருவாகும். அரசுப் பணியாளர்களின் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலருக்கு பெரிய தொகை கடனாக கிடைக்கும். வாக்கு ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பிறரிடம் பேசும் போதும் கருத்து தெரிவிக்கும் போதும் கவனமாகவும் இருப்பது நல்லது. சில ருக்கு வீடு மாற்றம், வேலை மாற்றம் அல்லது ஊர் மாற்றம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெண்களுக்கு மன உளைச்சல் மன அழுத்தங்கள் நீங்கும். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும்.உயர்கல்வி படிப்பவர்களுக்கு எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். குரு பகவான் வக்ர நிவர்த்தி பெறும் போது எதையும் சமாளிக்கும் தைரியத்தை யும் தெம்பையும் வழங்குவார். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

கன்னி

வெற்றிக் கனியை ருசிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மகிழ்ச்சி யும் மன நிம்மதியும் அதிகரிக்கும். அரசு ஊழியர்க ளுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிரிகள் தொந்தரவு நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும் தொழில் போட்டிகள் குறையும். வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவார்கள். திருமணம் போன்ற சுப காரிய பேச்சுவார்த்தை நடக்கும். பாகப் பிரிவினை யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். உடன் பிறந்த வர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அடமான நகைகள் சொத்துக்களை மீட்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.சப்த மாதாக்களை வழிபட சங்கடங்கள் அகலும்.

துலாம்

நிம்மதியான வாரம்.வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சுக்கிரனுக்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது.உங்கள் யோ சனை, சிந்தனை, அறிவு, திட்டம் போன்றவை பயனுள்ளதாக இருக்கும்.முதலீட்டாளர்கள் பெரிய முதலீடுகளை பயன்படுத்தி புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். புதிய அரசாங்க ஒப்பந்தங்கள் கிடைக்கும் .சகோதர உறவுகளால் ஏற்பட்ட மன சஞ்சலங்கள் மாறும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். வசிக்கும் வீட்டை விரி வாக்கம் செய்வீர்கள். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் ஆவணங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். மருத்துவமனைச் செலவு கள் முற்றிலும் அகலும். கை, கால், வலி அசதி நீங்கும். வீட்டில் முடங்கி கிடந்தவர்கள் வெளியில் சென்று வரும் அளவிற்கு ஆரோக்கி யத்தில் முன்னேற்றம் உண்டாகும். விவசாயிகளுக்கு கிணறு வெட்டக் கடன் கிடைத்து வாழ்வாதாரம் உயரும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் மிகுதியாகும். ஸ்ரீ வராகியை வழிபட நல்ல வாய்ப்பு கள் கிடைக்கப்பெற்று நிம்மதி கூடும்.

விருச்சிகம்

பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் தேடி வரும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய்க்கு 2,5ம் அதிபதியான குருவின் சம சப்தம பார்வை உள்ளது.புதிய தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும்.கையில் பணம் புரள்வதால் கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம். சுய ஜாதக தசா புக்தி சாதகம் அறிந்து சுய தொழில் துவங்க வேண்டும். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து பாராட்டு களைப் பெறுவீர்கள். சிலருக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக் கும். நீண்ட நாட்களாக இருந்த பண பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திடீர் யோகங்கள் கை கூடி வரும். பங்குச்சந்தை முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை தரும். மூத்த சகோதரர்களின் ஆதரவும் ஒத்துழைப் பும் கிடைக்கும். குரு வக்ர நிவர்த்தி பெற்றவுடன் திருமண முயற்சிகள் கைகூடும். முழுத் திறமை களையும் காட்டி மேலதிகாரிகளின் கவனத்தைக் ஈர்ப்பீர்கள்.நீண்ட காலமாக நிலவிய சில பிரச்சினை கள் தீரப் போவதற்கான வழி பிறக் கும். சக்கரத்தாழ் வாரை வழிபட நவகிரக தோஷம் விலகும்.

தனுசு

தடைக் கற்கள் படிக்கற்களாக மாறும் வாரம். ராசியில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை உள்ளது. இதற்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது.முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறுவீர்கள்.குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.பணவரவு சிறப்பாக இருப்பதால் கடன் நெருக்கடி கள் சற்று குறையும். துக்கம், துயரம், சங்கடங்கள் விலகும்.வாக்கு வன்மை யால், பண பலத்தால் விரும்பி யதை சாதித்துக் கொள்வீர்கள். பங்கு வர்த்த கர்களுக்கு மிகச் சாதகமான காலம். தொழில் முன்னேற்றம் மற்றும் உத்தியோக உயர்வில் சாதகமான பலன் உண்டு. அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு வேலை முயற்சி சித்திக்கும். புத்திர பிரார்த்தம் உண்டாகும்.மாமனார், மாமி யாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும்.பெண்களுக்கு கணவரின் பாராட்டும் பரிசுகளும் கிடைக்கும்.நோய்கள் நீங்கி ஆரோக்கி யம் அதிகரிக்கும். திருமணத்திற்கு வரன் தேடத் துவங்குவீர்கள்.சிலருக்கு கண் சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகும். விவசாயிகள் உயர் ரக கறவை மாடு வாங்கி பயன் பெறுவீர்கள். குலதெய்வ வழிபாட்டால் அனுகூலமான பலனை அடைவீர்கள்.

மகரம்

விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம்.ராசிக்கு 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை குரு பார்வையில் உள்ளது.பிறருக்கு உதவுவதில் ஆர்வம் அதிகரிக் கும். தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், நண்பர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.வியா பாரத்தில் பெரிய அளவில் பண முதலீடு செய்ய வேண்டாம். யாருக்கும் பெரிய பணம் கடனாக கொடுக்க வேண்டாம். கடன் தொல்லை ஒரு பக்கம் இருந்தாலும் மீளும் வகையான மார்க்கம் தென்படும். புதிய தொழில் முயற்சிகளைத் தவிர்க்க வும். கோபத்தை கட்டுப்படுத்தவும். பூமி வாங்கும் விசயத்தில் சிந்தித்து நிதானமாக செயல்படுவது சிறப்பு. திட்டமிட்டு செயல்பட பணம், புகழ், அந்தஸ்து, கவுரவ பதவி, பதவி உயர்வு போன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் ஈடேறும். இறை வழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும். தீர்க்கமாக யோசிக்காமல் எடுக்கும் முடிவு எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும்.உடன் பிறந்தவர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் நிலவிய மனக்கசப்பு மாறும். வீடு, வாகன யோகம் உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆஞ்சநேயர் வழிபாட்டால் இன்னல்களில் இருந்து மீள முடியும்.

கும்பம்

அதிர்ஷ்டம் அரவணைக்கும் வாரம் ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை குரு பார்வையில் உள்ளது.தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் தடை யின்றி கிடைக்கும். சிலர் புதிய வேலை வாய்ப் பிற்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். அரசு உத்தியோக முயற்சி கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும்.அரசியல்வாதிகளுக்கு சமூக அந்தஸ்து உயரும். விருப்ப திருமணத்திற்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்து கிடைப்பதில் சட்டச் சிக்கல் விலகும்.சிலருக்கு அத்தை, மாமா அல்லது சித்தி, சித்தப்பா மூலம் அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும். தாய் வழி உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை செலுத்துவீர்கள். சிலர் குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை தேடி அலைவார் கள்.14.12.2025 அன்று இரவு 9.41 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தவறான போன் தக வலை நம்பி அக்கவுண்ட் நம்பரை யாருக்கும் தரக் கூடாது. சேமிப்பில் உள்ள பணத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. காவல் தெய்வ வழிபாட்டால் நிம்மதியை அதிகரிக்க முடியும்.

மீனம்

பெயர், புகழுடன் வாழும் அமைப்பு உண்டாகும் வாரம். ஜென்ம சனியால் பகைமை பாராட்டிய உறவுகள் தற்போது பக்க பலமாக இருப்பார்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். சமூக அந்தஸ்தை நிலைப்படுத்தும் கவுரவப் பதவிகள் கிடைக்கும். புத்திக் கூர்மை அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பய உணர்வு நீங்கும். தொழில், உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து படிப்படியான முன்னேற்றம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு விண்ணப்பித்த கடன், பண உதவிகள் கிடைக்கும். கை மறதியாக வைத்த முக்கியமான ஆவணங்கள் நகைகள் கிடைக் கும். இடப் பெயர்ச்சி செய்ய நேரும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் ஏற்படலாம். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி சாதகமாகும். 14.12.2025 அன்று இரவு 9.41 மணி முதல் 17.12.2025 அன்று காலை 10.26 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிகமான அலைச்சல், உறவுகள் மீது அதிருப்தி, பழகிய வட்டா ரத்தில் ஏமாற்றம் உண்டாக வாய்ப்புள்ளது. புதிய தொழில் முயற்சியை தவிர்க்கவும். எதிலும் ஈடுபாட்டுடன் இருக்க முடியாது. பண விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது. தினமும் நவகிரக காயத்ரி மந்திரம் படிக்கவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Tags:    

Similar News