செய்திகள்

இந்தோனேசியாவில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

Published On 2018-08-05 12:38 GMT   |   Update On 2018-08-05 13:25 GMT
இந்தோனேசியாவின் லம்பாக் என்ற தீவின் அருகே இன்று 7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #Earthquake
ஜகர்தா:

இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுமத்ராவை ஒட்டியுள்ள லம்பாக் என்ற தீவின் அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக நிலநடுக்கம் பதிவானது என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் இந்தோனேசிய அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. #Earthquake
Tags:    

Similar News