செய்திகள்

காலாவதியான கண் மையை பயன்படுத்தியதால் பார்வை இழந்த பெண்

Published On 2018-07-22 14:54 IST   |   Update On 2018-07-22 14:54:00 IST
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் காலாவதியான கண் மையை பயன்படுத்தியதால் பார்வை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னி:

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஷெர்லி பாட்டார். இவர் தனது கண் இமைகளுக்கு கண்மை பூசி அலங்காரம் செய்தார்.

ஆனால் சில நாட்களிலேயே கண் எரிச்சல் தொடங்கியது. இதனால் அவதிப்பட்ட அவர் டாக்டர்களிடம் சென்று சிகிச்சை பெற்றார்.

கண்ணை பரிசோதித்த டாக்டர் ஷெர்லி காலாவதியான கண் மையை பயன்படுத்தி இருப்பதாக கூறினார். இது 20 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது. எனவே கண்ணில் தொற்று ஏற்பட்டு பார்வை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

எனவே பல்வேறு இடங்களுக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டும் பலன் இல்லை. கண் பார்வை குறைந்து கொண்டே இருக்கிறது. தற்போது கண் பார்வை சிறிதளவே உள்ளது. இப்போது அவர் ஊன்றுகோல் பயன்படுத்தி நடக்கிறார். விரைவில் முழு பார்வையும் பறிபோகும் அபாயம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News