செய்திகள்

இங்கிலாந்தில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 ஆவணங்கள் அழிப்பு

Published On 2018-05-27 23:10 GMT   |   Update On 2018-05-27 23:10 GMT
இங்கிலாந்தில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 முக்கிய ஆவணங்களை காமன்வெல்த் அலுவலகம் முற்றிலுமாக அழித்துவிட்டது. #IndiaSrilanka #Documents #Destroyed
லண்டன்:

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தில் காலனி நாடுகள் பற்றிய முக்கிய ஆவணங்கள் சேகரித்து வைக்கப்படுவது வழக்கம். இதில் இங்கிலாந்து உளவு நிறுவனம், ராணுவத்தின் முக்கிய ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் அண்மையில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 முக்கிய ஆவணங்களை காமன்வெல்த் அலுவலகம் முற்றிலுமாக அழித்துவிட்டது.

இதில் 2 ஆவணங்கள் 1978 மற்றும் 1980-ம் ஆண்டுகளுக்கு இடையே விடுதலைப்புலிகளின் நெருக்கடி காரணமாக இலங்கை ராணுவத்துக்கு இங்கிலாந்து உளவு துறை மற்றும் ராணுவ பிரிவு அறிவுறுத்தல் வழங்கிய ஆவணங்கள் ஆகும். மேலும் 2 ஆவணங்கள் 1979-ம் ஆண்டு முதல் 1980 முடிய இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே இருந்த நட்புறவு தொடர்பானது.

இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதற்கு, வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி வரலாற்று ஆராய்ச்சியாளர் பில் மில்லர் கூறுகையில் “முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணங்களை அழித்திருப்பதன் மூலம் வரலாற்றில் இனி இந்த ஆண்டுகளில் உள்ள தகவல்கள் குறித்து யாராலும் ஆய்வும் செய்ய முடியாதது” என்று கவலை தெரிவித்தார்.

ஆனால் ஆவணங்களை அழித்த காமன்வெல்த் அலுவலகமோ, “இங்கிலாந்தின் ஆவண கொள்கைப்படிதான் இவை அழிக்கப்பட்டு உள்ளன” என்று விளக்கம் அளித்துள்ளது.  #IndiaSrilanka #Documents #Destroyed
Tags:    

Similar News