செய்திகள்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Published On 2018-05-27 22:19 GMT   |   Update On 2018-05-27 22:19 GMT
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் எச். புஷ் உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். #GeorgeHWBush
வாஷிங்டன்:

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் எச். புஷ் (93).  இவரது மனைவி பார்பரா புஷ் தனது 92-வது வயதில் கடந்த மாதம் மரணம் அடைந்தார்.

அமெரிக்க ஜனாதிபதிகளில் 73 வருடங்கள் நீண்ட காலம் வாழ்ந்த தம்பதி என்ற பெருமையை பெற்ற இவர்களது மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் எச். புஷ் உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பாக, ஜார்ஜ் புஷ்ஷின் அலுவலக செய்தி தொடர்பாளர் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷுக்கு கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்கிடையே, நேற்றும் புஷ்ஷுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மைனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார். #GeorgeHWBush
Tags:    

Similar News