செய்திகள்

அயர்லாந்தில் கருகலைப்புக்கு அனுமதிக்கும் சட்டத்திருத்தத்துக்கான பொது வாக்கெடுப்பு தொடங்கியது

Published On 2018-05-25 17:45 IST   |   Update On 2018-05-25 17:45:00 IST
அயர்லாந்தில் நாட்டில் கருகலைப்பு செய்ய அனுமதி அளிக்கும் சட்டத்திருத்தத்துக்கான பொது வாக்கெடுப்பு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. #Irelandreferendum repealabortionban

டப்ளின்: 

அயர்லாந்து நாட்டில் கருகலைப்பு செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து அங்கு பல்வேறு போராட்டங்களை நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து, அந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வாக்கெடுப்பு இன்று காலை 7 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) தொடங்கியது. இதில் 3.2 கோடி மக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பு உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது.

இந்த வாக்கெடுப்பில் கருகலைப்புக்கு ஆதரவாக வெற்றி பெரும் பட்சத்தில் 12 வார காலம் வரை கருகலைப்பு செய்யலாம் என்று சட்டம் மாற்றியமைக்கப்படும். 


மரணமடைந்த இந்திய பல் மருத்துவர் சவீதா 


அயர்லாந்து நாட்டில் கருகலைப்பு செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் இந்தியாவை சேர்ந்த பல் மருத்துவர் சவீதா கடந்த 2012-ம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Irelandreferendum repealabortionban
Tags:    

Similar News