செய்திகள்

பாகிஸ்தானில் பாலம் இடிந்த விபத்தில் 5 மருத்துவ மாணவர்கள் பலி

Published On 2018-05-13 15:50 IST   |   Update On 2018-05-13 15:50:00 IST
பாகிஸ்தான் நாட்டின் நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் ஆற்றின் மீதிருந்த மரப்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். #PoKbridgecollapse #Fivestudentskilled
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் உள்ள லாகூர் மற்றும் பைசலாபாத் நகரங்களை சேர்ந்த இரு தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள நீலம் பள்ளத்தாக்கு பகுதிக்கு இன்று சுற்றுலா வந்தனர்.

அங்குள்ள ஆற்றங்கரையோரம் நின்று செல்பி எடுக்க நினைத்த அவர்கள் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள சிறிய மரப்பாலத்தின் மீது கும்பலாக நின்று புகைப்படம் எடுத்தனர். பாரம் தாங்காமல் மரப்பாலம் நொறுங்கி ஆற்றில் விழுந்த விபத்தில் சுமார் 25 மாணவர்கள் ஆற்றுச்சுழலில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்து விரைந்துவந்த ராணுவம் மற்றும் மீட்புப்படையினர் தண்ணீருக்குள் குதித்து சிலரை உயிருடனும், 5 மாணவர்களை பிரேதமாகவும் மீட்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #PoKbridgecollapse #Fivestudentskilled 
Tags:    

Similar News