இந்தியா

'தேசிய பெருமையான ஐபிஎல்-ன் ஏலம் தொடர்ந்து வெளிநாட்டில் நடத்தப்படுவது ஏன்?' - பிரியங்க் கார்கே!

Published On 2025-12-16 21:53 IST   |   Update On 2025-12-16 21:53:00 IST
  • இவ்வளவு பெரிய, பணம் சம்பாதிக்கும் நிகழ்வை நமது நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு மாற்றுவதை ஏன் தொடர்ந்து செய்கிறீர்கள்
  • இந்த செயலை வேறு யாராவது செய்திருந்தால், அவர்கள் உடனடியாக துரோகி என்று முத்திரை குத்தப்பட்டிருப்பார்கள்

உலகிலேயே மிகவும் பிரபலமான மற்றும் பணக்கார கிரிக்கெட் லீக் என்றால் அது இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல்தான். அடுத்தாண்டு இதன் 19வது சீசன் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் தொடங்கியது. 

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவரும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே, ஐபிஎல் ஏலம் தொடர்ந்து ஏன் வெளிநாட்டில் நடத்தப்படுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய பிரியங்கா கார்க்,

''ஐபிஎல் ஏலம் இந்தியாவுக்கு பதிலாக அபுதாபியில் ஏன் நடத்தப்படுகிறது? என்ன கட்டாயம்?  இடங்கள் பற்றாக்குறையா? அல்லது இது வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவா? ஐபிஎல் தேசிய பெருமையின் அடையாளமாக இருந்தால், இவ்வளவு பெரிய, பணம் சம்பாதிக்கும் நிகழ்வை நமது நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு மாற்றுவதை ஏன் தொடர்ந்து செய்கிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் இந்த செயலை வேறு யாராவது செய்திருந்தால், அவர்கள் உடனடியாக துரோகி என்று முத்திரை குத்தப்பட்டிருப்பார்கள். ஆனால் பிசிசிஐ என்ன செய்தாலும் அது வளர்ந்த இந்தியாவுக்காகத்தான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

Similar News