இனிதே முடிந்த ஜோர்டான் பயணம்.. எத்தியோப்பியாவில் தரையிறங்கிய மோடி
- அவரை அமரவைத்து ஜோர்டான் மன்னர் கார் ஓட்டிய வீடியோ வைரலானது.
- இந்தியர்களுடன் சந்திப்பு நடந்தும் மோடி அடுத்ததாக ஓமன் செல்ல உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல் கட்டமாக பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன் வரவேற்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
அதன்பின், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின் அருங்காட்சியகம் ஒன்றை பார்வையிட்டார். அவரை அமரவைத்து ஜோர்டான் மன்னர் கார் ஓட்டிய வீடியோ வைரலானது.
இந்த நிலையில், ஜோர்டான் டிரிப்-ஐ முடித்துவிட்டு, பிரதமர் மோடி எத்தியோபியா சென்றடைந்தார்.
எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலியின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள மோடியை எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலி வரவேற்றார்.
இந்த பயணத்தில் இரு தரப்பு பேச்சுவார்த்தை, எதியோபியாவுக்கு புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் சந்திப்பு நடந்தும் மோடி அடுத்ததாக ஓமன் செல்ல உள்ளார்.