செய்திகள்

கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் ஜெட்லேக்: ஆய்வில் தகவல்

Published On 2016-11-28 20:36 IST   |   Update On 2016-11-28 20:36:00 IST
தொடர்ச்சியாக ஜெட்லேக் பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்ளும் மனிதனுக்கு கல்லீரல் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
நியூயார்க்:

இன்றைய சூழலில் பொருளாதாரத் தேவைகளுக்காக மனிதர்கள் இரவு நேரங்களில் பணி செய்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐ.டி துறை ஊழியர்கள், பி.பி.ஓ நிறுவனங்களில் பணியாற்றுவோர் இரவுப்பணி செல்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் பணியாற்றுவோர் ஜெட்லேக் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.

வெவ்வேறு நேரங்களில் பயணம் செய்வது, இரவு பணி, சரியான நேரத்துக்கு தூங்க செல்லாதது ஆகியவை ஜெட்லேக் பிரச்சினைக்கு முக்கிய காரணங்களாகத் திகழ்கின்றன.இதுதவிர விமானங்களில் பயணம் செய்வதும் ஜெட்லேக் பிரச்சினை வர காரணமாகிறது.

இந்நிலையில் ஜெட்லேக் காரணமாக மனிதனுக்கு கல்லீரல் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்க மருத்துவர்கள் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளனர்.

ஜெட்லேக் தொடர்பாக எலிகளை வைத்து சோதனை நடத்தியதில் அவைகளின் எடை அதிகரித்தது. மேலும், உணவை செரிக்க பயன்படும் அமிலங்களும் வழக்கத்தை விட அதிகளவில் சுரந்தன. ஆராய்ச்சியின் முடிவில் அமிலங்கள் அதிகளவில் சுரப்பது கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர்களில் ஒருவரான மூர் "நிறைய மனிதர்கள் ஜெட்லேக் பிரச்சினை காரணமாக கல்லீரல் புற்றுநோய் வருமா? என ஆச்சரியம் அடைகின்றனர்" என இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

Similar News