உலகம்

காசாவில் உள்ள தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்: இருவர் பலி- பலர் காயம்

Published On 2025-07-17 18:54 IST   |   Update On 2025-07-17 18:54:00 IST
  • காசாவில் உள்ள தேவாலயம் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்.
  • தாக்குதலில் தேவாலயத்தின் காம்பவுண்ட் சேதமடைந்துள்ளது.

காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், அங்குள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் காம்பவுண்ட் சேதமடைந்துள்ளது.

தேவாலயத்தின் வளாகப் பகுதி மீதான இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்த நிலையில், பலர் காயம் அடைந்துள்ளனர். காசாவில் உள்ள ஒரேயொரு தேவாலயம் பேமிலி கத்தோலிக்க ஆலயம்தான். போரினால் வீடுகளை இழந்த கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஏராளமானோர் இந்த ஆலயத்தின் வளாகத்தில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவாலயத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து அறிந்திருப்பதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், "மதத் தலங்கள் உட்பட பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் கட்டமைப்புகளுக்கு ஏற்படும் தீங்கைக் குறைக்க அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும், அவற்றுக்கு ஏற்பட்ட எந்தவொரு சேதத்திற்கும் வருந்துவதாகவும்" தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News