உலகம்

காங்கோவில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் 193 பேர் உயிரிழப்பு - அடுத்தடுத்து நடந்த சோகம்

Published On 2025-09-13 13:24 IST   |   Update On 2025-09-13 13:24:00 IST
  • காங்கோ ஆற்றில் சுமார் 500 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்தது.
  • அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் ஆவர்.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அடுத்தடுத்து நடந்த இரண்டு படகு விபத்துகளில் 193 பேர் உயிரிழந்தனர்.

காங்கோவின் வடமேற்கு மாகாணமான ஈக்வேட்டரில் வியாழக்கிழமை மாலை, லுகோலிலா பகுதியில் உள்ள காங்கோ ஆற்றில் சுமார் 500 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்தது. இதில் படகு கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 107 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 209 பேர் மீட்கப்பட்டதாக காங்கோ அரசு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு, அதே மாகாணத்தில் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பசன்குசு பகுதியில் மற்றொரு மோட்டார் படகு விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் இறந்த 86 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலர் காணாமல் போயுள்ளனர். இந்த விபத்து இரவில் அதிக சுமையுடன் பயணம் செய்தபோது ஏற்பட்டதாக தெரிகிறது.

காங்கோவில் மோசமான சாலை கட்டமைப்புகள் காரணமாக, மக்கள் மலிவான படகு பயணங்களை அதிகம் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News