செய்திகள்

இந்தியாவின் நம்பத்தகுந்த பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பிராண்டு இது தானாம்

Published On 2018-12-24 05:53 GMT   |   Update On 2018-12-24 05:53 GMT
இந்தியாவின் நம்பத்தகுந்த பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பிராண்டு பற்றிய விவரங்களை சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ளது. #Smartphone
சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.) வெளியிட்டிருக்கும் சமீபத்திய தகவல்களில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதிகம் விரும்பும் பிராண்டாக ஒன்பிளஸ் இருப்பது தெரியவந்துள்ளது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோரில் 90 சதவிகிதம் பேர், ஒன்பிளஸ் பிராண்டு புத்தம் புதிய சிறப்பம்சங்களை வழங்குவதாகவும், பலர் ஒன்பிளஸ் பிராண்டு மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்மார்ட்போன் வாங்க ஆன்லைன் முறையை தேர்வு செய்வோரின் முதல் தேர்வாக ப்ளிப்கார்ட் தளத்திற்கு வருவதாகவும், பிரீமியம் ஸ்மார்ட்போன் வாங்குவோரின் முதல் தேர்வாக அமேசான் இருக்கிறது என ஐ.டி.சி. அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஆஃப்லைன் சந்தையை பொருத்த வரை பிரீமியம் சாதனங்களை வாங்க ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனையகங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.


பல்வேறு சாதனங்களுக்கு ரிலையன்ஸ் டிஜிட்டல் அதிகப்படியான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகின்றன. பொருட்களை வாங்க சிறந்த மையமாக, ஆன்லைன் தளங்கள் பலரின் முதன்மை தேர்வாக மாறி வருகிறது. பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய விரும்புகின்றனர்.

ஆன்லைனில் பொருட்களை வாங்குவது எளிமையானதாக இருப்பதாக ஷாப்பிங் செய்வோரில் 40 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆன்லைன் வர்த்தகர்கள் வழங்கும் சலுகைகள் அடுத்தடுத்த காரணங்களாக வாடிக்கையாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை கடந்து மாத தவணை முறை அதிகம் பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர். பல்வேறு வணிக நிறுவனங்கள் மாத தவணை முறையை எளிமையாக்கியதே இதற்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Smartphone
Tags:    

Similar News